ஹட்டன் பொகவந்தலாவயில் கோட்டாபயவின் உருவப்பொம்மை எரித்து பாரிய ஆர்ப்பாட்டம்!

0
59

ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியின் டியன்சின் நகரில் கோட்டாபய ராஜபக்சவின் உருவப் பொம்மை எரித்து பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட ஒட்டுமொத்த அரசாங்கமும் பதவி விலகவேண்டும் என வலியுறுத்தி இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது கோட்ட கோ கோம், ஒரே ஓட்டுல மக்கள் எல்லாம் ரோட்டுல, போ போ நாட்டைவிட்டுப் போ போன்ற பாதாதைகளை ஏந்தியதுடன், கோங்களையும் இட்டு ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர்.

இன்றைதினம் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தினால் ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியில் சேவையில் ஈடுபடுத்தப்பட்ட இரண்டு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு பேருந்துகளும் வீதியின் நடுவே இடைறுத்தப்பட்டு, குறித்த வீதியில் எந்த ஒரு வாகனங்களையும் உள் நுளைவதற்கு ஆர்ப்பாட்டக் காரர்கள் அனுமதிக்கவில்லை.

அத்தோடு, டியன்சின் நகர வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்ததோடு, ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியின் போக்குவரத்தும் நீண்ட நேரம் தடைப்பட்டிருந்தது.