முகக்கவசங்கள் அவசியமில்லை: மருத்துவ நிபுணர் சங்கம் அறிவிப்பு!

0
524

பொதுப் போக்குவரத்து மற்றும் உள்ளகச் செயல்பாடுகளில் கலந்துகொள்ளும் போதும் மட்டுமே முகக்கவசம் அணிவதற்கான தீர்மானம், நாட்டில் கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்துவதில் ஒரு “பின்னோக்கிய படி” என்று மருத்துவ நிபுணர்கள் சங்கம்(ஏஎம்எஸ்) தெரிவி;;த்துள்ளது.

பொது மற்றும் தனியார் இடங்களில் முகமூடி அணிவது கட்டாயமில்லை என்று புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சுகாதார அமைச்சர்; சன்ன ஜயசுமண ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இலங்கையில் கொரோனா நிலைமை மிகவும் கட்டுப்பாட்டில் உள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்

எனினும் முகக்கவசம் இல்லாமல் தனியாக நடப்பதை நியாயப்படுத்தமுடியும்.

எனினும் பொதுமக்களின் வெளிப்புறக் கூட்டங்களில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவதற்கான கணிசமான ஆபத்து இன்னும் உள்ளது என்று மருத்துவ நிபுணர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ள போதிலும், உலகின் பல்வேறு பகுதிகளில் புதிய விகாரங்கள் புழக்கத்தில் உள்ளன (தென்னாப்பிரிக்காவில் ஓமிக்ரான் பிஏ.4 மற்றும் பிஏ.5), மற்றொரு அலை தோன்றியுள்ளது.

எனவே குறிப்பாக நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் தற்பாதுகாப்பைக் கைவிடுவது விவேகமற்றது என்று சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் மருந்துகள் மற்றும் இதர மருத்துவ உதிரிபாகங்களுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றன.

இந்த சூழ்நிலையில் கொரோனா நோய்த்தொற்றுகளின் அதிகரிப்பு மற்றும் தேவைப்படுபவர்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்க இயலாமை ஆகியவை அழிவை ஏற்படுத்தும் என்றும், நாட்டின் சீரழிந்து வரும் பொருளாதார நிலைமையை மேலும் மோசமடையச் செய்யும் என்றும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே, முகக்கவசம் குறித்த முடிவை ரத்து செய்யுமாறு சங்கம் வலியுறுத்துகிறது,