இன்று முதல் நாடளாவிய ரீதியில் ஹர்த்தால்: தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன சேவைகள் கூட்டமைப்பு தெரிவிப்பு

0
429

இன்று முதல் நாடளாவிய ரீதியில் ஹர்த்தால் முன்னெடுக்கப்படவுள்ளதாக தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன சேவைகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த ஹர்த்தாலுக்கு 300க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் பங்கேற்கின்றன என சுகாதார வல்லுநர்கள் சங்கத்தின் ஏற்பாட்டாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

“இந்த நெருக்கடிக்கு தற்போதைய ஆளும் கட்சியே நேரடியாகப் பொறுப்பேற்க வேண்டும். அரசாங்கம் இந்தச் செய்தியை செவிமடுத்து இந்த நாட்டில் புதிய நிர்வாகத்தை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.

எனவே, இன்றைய தினம் இளைஞர்கள் தங்கள் போராட்டத்தை வெற்றியுடன் முடிக்க வேண்டும் என்று நம்பி, தொழிற்சங்க இயக்கமும் வெகுஜன இயக்கமும் இணைந்து கருப்பு தினமாகப் பிரகடனப்படுத்துகிறோம்.

இந்த தேசிய எதிர்ப்பு தினத்தில், நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஒரு பெரிய பிரச்சாரத்தை நடத்துகிறோம்.

அதேபோல் சில சேவைகளை புறக்கணிக்கிறோம். இதனை எதிர்வரும் 28ஆம் திகதி நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டமாக அபிவிருத்தி செய்வதற்கும் நாங்கள் நம்புகிறோம்.

அந்த நேரத்தில், நாடளாவிய ரீதியிலான செயல் திட்டங்களை எட்டுவதற்கு எதிர்பார்க்கிறோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.