அமெரிக்காவில் முகக்கவச கட்டுப்பாடு நீக்கம்!

0
34

அமெரிக்காவில் பொது போக்குவரத்தின் போது முகக்கவசம் அணியும் உத்தரவை புளோரிடா மாவட்ட நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

பெருகி வரும் கொரோனா பரவலை கடுப்படுத்த பொது போக்குவரத்தின் போது மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற உத்தரவை வரும் மே 3ஆம் திகதி வரை அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு ஆணையம் நீடித்தது.

இதுகுறித்து விசாரணை நடத்திய புளோரிடா மாவட்ட நீதிமன்றம் முகக்கவசம் கட்டாய உத்தரவை ரத்து செய்தது.

மேலும் மக்கள் முகக்கவசம் அணிய உத்தரவிட அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆணையத்தின் எந்த சட்ட அதிகாரமும் இல்லை எனவும் புளோரிடா மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.