ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் கடும் வாத பிரதிவாதங்கள்: பதிலடி கொடுத்த சபாநாயகர்!

0
675

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் இன்று கடும் வாத பிரதிவாதங்கள் இடம்பெற்றிருந்தன.

இதன்போது ஆர்ப்பாட்டங்களை ஒடுக்குவதற்கு வன்முறைகள் ஊடாக நடவடிக்கை எடுக்கும் அரசாங்கத்துக்கு எதிராக ஒன்றிணைந்து பிரேரணையை கொண்டுவர எதிர்க் கட்சியினர் தயாரென சிறிலங்காவின் எதிர்க் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இதேவேளை கட்சித் தலைவர்கள் தம்மிடம் கோரிக்கை விடுத்தால் அரச தலைவர் கோட்டபாய ராஜபக்ஷ பதவி விலகத் தயார் என்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் கருத்தை சபாநாயகர் நிராகரித்துள்ளார்.

இருப்பினும் சபாநாயகரே இதைச் சொன்னார் என்றும் சபாநாயகர் அப்பட்டமான பொய்யர் என்றும் சஜித் பிரேமதாச தனது நிலைப்பாட்டில் நின்றார். இதற்கு நீங்கள் தான் பொய் சொல்கிறீர்கள் என்று சபாநாயகர் பதிலடி கொடுத்துள்ளார்.

தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

நாடாளுமன்றத்தில் இருக்கக்கூடிய அனைத்து கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்களும் சென்று இராஜினாமா செய்யுமாறு கூறினால், தான் அதற்கு தயாராக இருப்பதாக கோட்டாபய கூறியதாக, கட்சி தலைவர்களின் கூட்டத்தின் போது சபாநாயகர் தெரிவித்ததாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

ஆகவே இதனை செய்வதற்கு நாம் தயாரென கூற விரும்புகிறோம். அதற்கான சந்தர்ப்பத்தை நீங்கள் ஏற்படுத்தித் தாருங்கள் எனவும் சபாநாகரிடம் கோரியுள்ளார்.

எனவே எதிர்க் கட்சியை சேர்ந்த அனைவரும் ஒருமித்த குரலாக அதனை மேற்கொள்வதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். ஆகவே சபாநாயகர் அவர்களே, மீண்டும் ஒருமுறை கோரிக்கை விடுக்கின்றோம்.

இன்று 12 மணிக்கு முன்பதாக குறித்த அதிகாரிகள் அனைவரையும் இங்கு வரவழைத்து என்ன நடந்தது என்பது தொடர்பில் உண்மையான விடயங்களை கேட்டறிந்து கொள்வதற்கு கட்சி தலைவர்களுக்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தருமாறு கோரிக்கை விடுக்கின்றேன்.

இந்த சம்பவத்தை மூடி மறைக்க வேண்டாமென துறைசார் அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.