றம்புக்கனை விவகாரம் தொடர்பாக மூவர் கொண்ட குழு நியமனம்!

0
43

றம்புக்கனையில் இடம்பெற்ற துப்பாக்கி சூடு குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மூவர் கொண்ட குழுவை நியமித்துள்ளது.

இதேவேளை, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கண்டியில் உள்ள அலுவலகத்திலிருந்து விசேட குழு ஒன்று சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலை அதிகரிப்பை கண்டித்து றம்புக்கனையில் மக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக காவல்துறையினரால் நேற்றிரவு கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கோபமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் காவல்துறையினர் துறையினர் மீது கல் வீச தொடங்கினர்.

ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடியா காவல்துறையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்.

குறித்த துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்ததுடன் 10 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.