மன்னார் கடற்பரப்பில் கைவிடப்பட்ட நிலையில் 81 கிலோ கேரள கஞ்சா மீட்பு

0
81

மன்னார் கடற்பகுதியில் இலங்கை கடற்படையினர் இன்றைய தினம் (20ம் திகதி) ரோந்து நடவடிக்கையின் போது கேரளாவிலிருந்து கடத்திவரப்பட்ட 81 கிலோ 220 கிராம் கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர்.

மன்னார் கடற்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் மணல் மேட்டில் சந்தேகத்திற்கிடமான சாக்கு மூட்டை ஒன்றினை அவதானித்து ஆய்வு செய்தனர்.

கேரளாவிலிருந்து கடத்திவரப்பட்டதாக நம்பப்படும் 25 பார்சல்களில் அடைக்கப்பட்ட சுமார் 81 கிலோகிராம் கேரள கஞ்சாவை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

மீட்கப்பட்ட கேரள கஞ்சா மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கடற்படையினரால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன் இதன் பெறுமதி 20 மில்லியன் ரூபாவிற்கும் அதிகம் என நம்பப்படுகிறது.