புதிய மின்சக்தி அமைச்சர் முன்வைத்த இரு யோசனைகள்!

0
47

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் என்ற வகையில் தனக்கு இரண்டு கடினமான பொறுப்புகள் உள்ளதாக அமைச்சரவை அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

முதல் கடமை என்பது கடினமான முடிவு என கூறிய விஜேசேகர, நாளாந்த இழப்பான 1.6 பில்லியன் ரூபாவை குறைக்கும் வகையில் எரிபொருள் விலைகள் திருத்தப்பட வேண்டும் என கூறினார்.

அத்துடன் எரிசக்தியில் உரிய நேரத்தில் எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்கும், எரிபொருளை பரவலாகக் கிடைக்கச் செய்வதற்கும், எரிபொருள் விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்துவதற்கும் முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் இரண்டாவதாக, மின்துறை அமைச்சர் என்ற ரீதியில் அமைச்சு தொடர்பான பிரச்சினைகளை சீர்செய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் புதிய மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.