இன்றைய ராசிபலன் {19 ஏப்ரல் 2022 }

0
630

மேஷம்

இன்று நாள் முழுவதும் சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய சங்கடங்கள் ஏற்படலாம். புதிய திட்டங்களைத் தள்ளி வைப்பது நல்லது. எந்த ஒரு செயலையும், ஆர்வமாகவும், நம்பிக்கையுடனும் செய்வதால் நற்பலன் கிடைக்க வாய்ப்புள்ளது.
வழக்கு சார்ந்த விஷயங்களில் ஒதுங்கி இருங்கள். எதிர்காலம் குறித்த எண்ணம் அதிகரிக்கும். மந்தமான மன நிலையில் இருப்பீர்கள். தொழில் சார்ந்த விஷயங்களில் ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும்.

ரிஷபம்

இன்று உங்களின் தொழில், வியாபார திட்டங்கள் நிறைவேறலாம்.எதிர்காலம் குறித்த உங்களின் செயல்பாடுகள் சாதகமாக அமையும். சட்டம், வழக்கு சார்ந்த விஷயங்களில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். பண் சார்ந்த பல்வேறு வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. சரியான வகையில் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வீர்கள். தொழில் சார்ந்த விஷயங்களில் மகத்தான நன்மைகள் தரும்.

மிதுனம்

 இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் சற்று காலதாமதமாகும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் செலவுகளும் அலைச்சலும் உண்டாக வாய்ப்பு உள்ளது. காதல் தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான நிகழ்வுகள் உண்டு.

படிப்பை முடித்து வேலைவாய்ப்பை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு வேலை கிடைப்பது சற்று காலதாமதமாக வாய்ப்பு உண்டு என்றாலும் வெற்றி நிச்சயம் குடும்பத்தில் உள்ள சகோதர சகோதரிகளுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும்.

அவர்கள் உங்களை நன்றாக புரிந்து கொள்வார்கள் கணவன் மனைவி உறவு அன்னியோன்னியமாக இருந்து வரும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் ஏற்றம் பெறுவார்கள் நீங்கள் எதிர்பார்த்த தனவரவு உண்டாகும்.

கடகம்

இன்றைய நாள் சிறந்த நாளாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருந்து வரும். அவ்வப்போது சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் குடும்பத்தில் அமைதி தவழும். குடும்பத்தில் உள்ள பெரியவர்களுடன் கருத்து வேறுபாடுகள் வருவதற்கு வாய்ப்பு உண்டு என்பதால் உங்கள் வார்த்தையில் நிதானம் தேவை.

பூர்வீக சொத்து தொடர்பான காரியங்களில் சற்று காலதாமதம் ஆகும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு காலதாமதமானாலும் வெற்றி கிடைக்கும். தன வரவு உண்டாகும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை சற்று அதிகமாக இருக்கும். இருப்பினும் அவற்றை திறம்பட எதிர்கொண்டு நிர்வாகத்தின் நம்பிக்கையை பெற்று விடுவீர்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு சிறிய அளவில் பொருளாதார பற்றாக்குறை இருந்தாலும் வெற்றிகரமாக சமாளிப்பீர்கள்.

சிம்மம் 

நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். மாணவர்கள் முன்னேற்ற பாதையை நோக்கி செல்வார்கள். தொழில் வாய்ப்புகள் சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு கிடைக்கும். தங்கள் தொழிலுக்கு தேவையான முதலீடுகளைப் எதிர்பார தனவரவு போன்றவை உண்டாகும் நாளாகும்.

குடும்பத்தில் உள்ள பெரியவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் வெற்றி அடையும். கணவன் மனைவி அன்னியோன்னியம் நன்றாக இருக்கும். அரசு தொடர்பான வேலைகள் சற்று காலதாமதமாக வாய்ப்பு உள்ளது.

கணவன் மனைவி உறவு நன்றாக இருந்து வரும். பொருளாதாரத்தில் முன்னேற்றத்தை அடைவீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த பல காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள் குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவது நண்பர்கள் அல்லது உறவினர்களின் வருகை அல்லது நீங்கள் குடும்பத்துடன் பயணம் செல்வது போன்றவைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும்.

கன்னி

அன்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமையும். வீட்டில் உள்ள பெரியவர்கள் உடன் கலந்து பேசி நல்ல முடிவை எடுப்பீர்கள். குடும்ப ஒற்றுமை நன்றாக இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் சந்திப்பு விருந்தினர் வருதல் இவைகளால் மன மகிழ்ச்சியும் சந்தோஷமும் உண்டாகும்.

குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டு குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும். மாணவர்களின் கல்வி சிறப்பாக இருக்கும். ஒரு சிலர் சொத்துக்கள் வாங்குவது வாகனங்கள் வாங்குவது இவற்றிற்காக கடன் பெற வேண்டியது வரலாம்.

வெளிநாடு செல்ல முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும். பிரயாணங்களால் நன்மையே கிடைக்கும். ஆகவே தைரியமாக பிரயாணங்களை மேற்கொள்ளலாம். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினை தீர்வுக்கு வரும். காதல் தொடர்பான பிரச்சினைகளில் அவர்களுக்கு தீர்வு கிடைக்கும் நல்ல நாளாகும்.

துலாம் 

இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் வெற்றி அடையும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் வெற்றி அடைவீர்கள். மாணவர்களின் கல்விநிலை நன்றாக இருக்கும். கல்விக்காக சற்று கூடுதல் செலவினங்கள் வர வாய்ப்பு உள்ளது என்றாலும் இவைகளால் எதிர் காலம் சிறப்பாக அமையும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் இட மாற்றத்தை எதிர்நோக்கி இருந்தால் அவை தொடர்பான காரியங்களை தற்போது துவக்கலாம். காதல் தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்கள் திருமணங்களைப் பற்றி வீட்டில் உள்ள பெரியவர்கள் உடன் கலந்து பேசி நல்ல தீர்வுக்கு வருவீர்கள்.

பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும் உத்தியோகத்தில் இருப்பவர்கள் மன நிம்மதி அடைவார்கள். உங்கள் கடின முயற்சியை நிர்வாகம் புரிந்துகொள்ளும். உத்தியோக உயர்வு மற்றும் ஊதிய உயர்வுக்கான வழிமுறைகள் ஓரிரு நாட்களில் தொடங்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்கு அனைத்து விஷயங்களிலும் நல்ல பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. செல்வாக்கு மிக்கவர்களின் தொடர்பு நன்மையைத் தரும். வியாபாரிகள் உங்களின் வியாபாரம் தொடர்பான விஷயங்களில் லாபம் பெறலாம். உங்களின் எந்த செயல்பாடுகளில் நம்பிக்கை அதிகரிக்கும். பொருளாதார நிலை மேம்படும். சட்டம், வழக்கு சார்ந்த விஷயங்களில் வெற்றி கிடைக்கும்.

தனுசு 

இந்த நாள் இனிமையாக நாள் ஆகும். வெளிநாடுகளில் வசித்து கொண்டிருப்பவர்கள் தங்கள் தாய் நாடுகளைப் பற்றிய சிந்தனை அதிகமாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வி நன்றாக இருக்கும். உயர்கல்வி கற்று கொண்டிருப்பவர்கள் முன்னேற்ற பாதையை நோக்கி செல்வார்கள்.

ஆராய்ச்சிப் படிப்பில் உள்ளவர்களுக்கு தேவையான நிதி உதவிகள் கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும். குடும்பத்தில் உள்ள சகோதர சகோதரிகளுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும்.

கடன் பிரச்சினை கட்டுக்குள் இருக்கும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு சற்று ஓய்வு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்ய வாய்ப்புகள் உண்டாகும்.

மகரம்

அன்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல ஓய்வு கிடைக்கும். குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்ய முடியும். இதனால் மன மகிழ்ச்சி உண்டாகும் ஒரு சிலருக்கு பிரயாணங்கள் குடும்பத்துடன் சென்று வர வாய்ப்பு உண்டாகும்.

மாணவர்களின் கல்விநிலை நன்றாக இருக்கும். உயர்கல்வி கற்று கொண்டிருப்பவர்கள் முன்னேற்ற பாதையை நோக்கி செல்வார்கள் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். ஆடை ஆபரணம் அணிகலன் சேர்க்கைக்கு வழி உண்டாகும்.

ஒரு சிலர் சொத்துக்கள் வாங்குவது எதிர்கால முதலீடு போன்றவற்றைப் பற்றி திட்டமிடுவார்கள். இவைகளில் வெற்றி கிடைக்கும். வெளிநாடு செல்ல முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு சற்று கால தாமதம் ஆகி நல்ல தகவல்கள் கிடைக்கும்.

கும்பம்

இன்று உங்கள் வாழ்க்கைத் துணை மற்றும் கூட்டாளிகளின் முழு ஆதரவு கிடைக்காது. இதன் காரணமாக நீங்கள் எந்த முடிவையும் எளிதில் எடுக்க முடியாது. மனக் குழப்பத்திற்கும், மன அழுத்தத்திற்கும் ஆளாக நேரிடும். உங்களின் மன வருத்தத்தை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். வியாபாரிகள் செயல்பாடுகள் மூலம் லாபமும், நல்ல பலன்களைப் பெற்றிட முடியும். உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும்.

மீனம்

வியாபார சூழலில் புதிய வணிக உறவுகள் மற்றும் ஒப்பந்தங்களை முடிப்பதற்கு இன்று சாதகமான காலம். வேலை தொடர்பான பயணங்கள் மற்றும் ஒத்துழைப்பு கிடைக்கக்கூடிய சாதகமான பலன் தரும். சில முக்கிய நபர்களின் தொடர்பு கிடைக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். உங்கள் மேலதிகாரிகளிடம் பணிவாக நடந்து கொள்ளவும். உங்கள் எதிரிகளிடம் கவனமாக இருக்கவும்.