நாட்டின் அழிவு அரசாங்கத்தின் திட்டமிட்ட செயலே! சஜித் பிரேமதாச உரை

0
35

தற்போதைய அரசாங்கம் திட்டமிட்டு நாட்டை அழித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.  

இன்றையதினம் நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். 

நாடு இன்று எதிர்நோக்கும் நெருக்கடிகள் தொடர்பில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் கருத்துக்களை முன்வைத்திருந்த போதிலும் ஆளும் தரப்பு அவைகளையெல்லாம் கேலி செய்ததாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.

தெளிவாக இந்த அரசாங்கம் நாட்டையும், மக்களையும் ஏமாற்றியுள்ளது. இது சிறிய குற்றமல்ல. இந்நாட்டில் உள்ள 220 இலட்சம் மக்களை படு குழிக்குள் தள்ளிய பெரும் குற்றம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.