1.7 மில்லியன் லாபத்தை பெற்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

0
43

கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 31 மார்ச் 2022 இல் முடிவடைந்த நிதியாண்டில், 1.7 மில்லியன் அமெரிக்க டொலர் குழு நிகரலாபத்தை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பெற்றுள்ளது.

தொற்றுநோய் சவால்களுக்கு மத்தியிலும் நிகரலாபத்தை பதிவு செய்துள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றின் மூலம் இதனை தெரிவித்த விமான நிறுவனம் தனது 2021-22 நிதியாண்டில் ஊழியர்களின் செலவுகள் மற்றும் மேல்நிலைகளைக் குறைப்பது உட்பட பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் இந்த நிதித் திருப்பத்தை அடைய முடிந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.