அதிகரிக்கப்படவிருக்கும் பாடசாலை வேன் கட்டணங்கள்!

0
36

பாடசாலை வேன் கட்டணத்தை 1000 ரூபாவினால் அதிகரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை பாடசாலை வேன் இயக்குநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நேற்றிரவு முதல் பெற்றோலின் விலையை அதிகரித்தன் காரணமாகவே இந்த நிர்ப்பந்தம் தமக்கு ஏற்பட்டுள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

டீசல் இல்லாததால் சேவையை தொடர்வதில் பல சிரமங்களை எதிர்நோக்கப்படுகின்றன.

எரிபொருள் நிரப்ப நீண்ட நேரம் வரிசையில் நிற்க வேண்டியுள்ளது,

இது மதிப்புமிக்க நேரத்தை வீணடிக்கும் என்றும் சங்கம் குறிப்பிட்டுள்ளது உண்மையில், கட்டணங்களை அதிகரிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று அகில இலங்கை பாடசாலை வேன் இயக்குநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.