ஊழல் மோசடிகளை மூடிமறைக்கவே ராஜபக்சர்கள் ஆட்சியில் தொடர முயற்சி!

0
54

ஊழல் மோசடிகளை மூடிமறைக்கும் நோக்கில் ராஜபக்சர்கள் ஆட்சியில் தொடர முயற்சிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலளார் பாலித ரங்கே பண்டார இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

புதிதாக அமைச்சரவையை நியமித்ததன் மூலம் பிரச்சினை மேலும் உக்கிரமடைந்துள்ளது. அனைத்து ராஜபக்சர்களையும் பதவி விலகுமாறு கோரப்பட்டு வரும் நிலையில் ஜனாதிபதியும், பிரதமரும் பதவி விலகாதிருப்பது, தாம் செய்த ஊழல் மோசடிகளை மறைக்கவே.

புதிய அமைச்சரவையை நியமிப்பதன் மூலம் எந்தவொரு மக்கள் பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது. இந்த நாட்டின் சொத்துக்களை கொள்ளையிட்ட ராஜபக்ச குடும்பம் தொடர்ந்தும் ஆட்சியில் நீடிப்பதனை மக்கள் விரும்பவில்லை.

புதிய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அநேகமான நபர்களுக்கு எதிராக ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. அவ்வாறனவர்களுக்கு சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பொறுப்பினை ஒப்படைப்பது நியாயமாகுமா.

மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வு வழங்க தவறியுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.