பாடசாலை போக்குவரத்து சேவை தொடர்பில் வெளியான அறிவிப்பு

0
50

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை கருத்திற்கொண்டு நாளை (20) பாடசாலை போக்குவரத்து நடவடிக்கைகளில் இருந்து விலகுவதாக அகில இலங்கை பாடசாலை வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்தடுத்து விலை அதிகரிப்புகள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில்,இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளதன் காரணமாக நாட்டின் பல பிரதேசங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன.

இதனை தொடர்ந்து இன்றைய தினம்  தனியார் பயணிகள் பேருந்துகளை சேவையில் இருந்து விலகிக்கொண்டுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்திருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாகனங்களை வீதிகளின் குறுக்கே நிறுத்தியும் பதாதைகளை ஏந்தியவண்ணம் போராட்டங்களில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும்,ரம்புக்கனை பகுதியில் ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்து ரம்புக்கனை பொலிஸ் பிரிவில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன், ஊரடங்கை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.