நிஜத்தில் பலி வாங்க வந்த பெண் நாகினி…

0
72

உத்தரபிரதேசத்தில் தனது ஜோடியை கொன்றவரை 7 முறை ஒரே பாம்பு கடித்து உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதில் அந்த மனிதர் 7 முறையும் உயிர் பிழைத்து உள்ளார் என்பதுதான் பெரிய விஷயம்.

உத்தரபிரதேச மாநிலம் மாநிலம் ராம்பூர் மாவட்டம் ஸ்வார் தெஹ்சில் மிர்சாபூர் பகுதியில் எஹ்சான் என்ற பப்லு விவசாய பண்ணையில் வேலை செய்கிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய வீட்டின் அருகே ஒரு இடத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார்.

அப்போது அங்கு இரண்டு பாம்புகள் பின்னி பிணைந்து கொண்டிருந்தது. இதை பார்த்ததும் எஹ்சான் அந்த ஜோடியில் ஆண் பாம்பை கொன்று விடார்.

பெண் பாம்பு உடனே அங்கிருந்து தப்பி எங்கேயோ சென்றுவிட்டது. இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இவர் வீட்டில் இருந்தபோது வீட்டிற்குள் எப்படியோ வந்த பாம்பு இவரை தீண்டியுள்ளது.

இதனால் வலி பொறுக்க முடியாமல் எஹ்சான் அலறி கத்தியுள்ளார். அந்த சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து, அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அவர் உயிர் பிழைத்து வீட்டுக்கு வந்தார்.

ஆனால், மறுபடியும் அதே பாம்பு அங்கு வந்து, அவரை மீண்டும் அவரை கடித்துவிட்டது. இப்படியே ஒரே பாம்பு மொத்தம் 7 முறை கடித்துள்ளது.

7 முறையும் உயிர் தப்பி உள்ளார். 7முறையும் அக்கம்பக்கத்தினர்தான் இவர் உயிரை காப்பாற்றியுள்ளனர்.

7 முறை பாம்பு கடித்தால் தான் ஏற்கனவே பாம்பு ஒன்றாக இருக்கும்போது அதில் ஒன்றை மட்டும் கொன்றது தான் இதற்கு காரணம் என்றும், அதுதான் இப்படி வந்து தன்னை பழிவாங்குகிறது என்றும் எஸ்ஸான் அலி வலுவாக நம்புகிறாராம்.

பாம்புக்கும் எஹ்சானுக்கும் இடையே நடக்கும் இந்தப் போரில், இயற்கையும் இருவருக்குமே துணை நிற்கிறது. ஆனால் இந்தப் போரின் முடிவு என்னவாகும் என்பது யாருக்கும் தெரியாது. 

இது போன்ற சம்பவம் சினிமாவில் தான் நடக்கும். பாம்பு பழிவாங்கும் நாகினி தொடருக்கு ரசிகர்கள் ஏராளம். ஆனால் நிஜத்தில் ஒரு வரை நாகினி பலி வாங்குவது ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.