எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில்: அதிகரிக்கப்படவுள்ள மற்றுமொரு கட்டணம்

0
37

எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்தடுத்து விலை அதிகரிப்புகள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில் எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஏற்ப முச்சக்கரவண்டி கட்டணத்தை அதிகரிக்க முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி முதல் கிலோமீற்றருக்கான கட்டணம் 80 ரூபாவாகவும், மேலதிக ஒவ்வொரு கிலோமீற்றருக்கும் 70 ரூபாவாகவும் உயர்த்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அகில இலங்கை முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவரான சுதில் ஜயருக் மேலும் கூறுகையில்,

எரிபொருள் விலைகள் 350 ரூபாவைத் தாண்டும் வரை அறிவிக்கப்பட்ட விலைகள் நிலையானதாக இருக்கும்.

நாட்டில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, வரிசையில் நின்று எரிபொருளைப் பெறுவதற்கு எடுத்துக் கொள்ளும் நேரம் ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு விலை அதிகரிப்பு அவசியமானது.

அதிகரித்து வரும் செலவீனங்களுடன் ஒப்பிடுகையில் பொதுமக்களுக்கு நியாயமான விலையேற்றம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.