எதிர்கட்சியின் பக்கத்தில் ஆசான உரிமையை கோரும் சுயேட்சைக்குழு!

0
36

எதிர்கட்சியின் பக்கத்தில் ஆசனங்களை ஒதுக்குமாறு சுயாதீனமாக செயற்படவுள்ளதாக அறிவித்துள்ள 41 நாடாளுமன்ற உறுப்பினர்களும் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போதைய நெருக்கடி நிலைக்கான குறுகிய கால மற்றும் நீண்ட கால தீர்வுகள் தொடர்பில் ஆராய்வதற்காக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று பிற்பகல் நாடாளுமன்றில் கட்சி தலைவர்கள் கூட்டம் இடம்பெற்றிருந்தது.

இதன்போதே குறித்த கோரிக்கை சபாநாயகரிடம் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த 41 பேருக்கும் இன்று நாடாளுமன்றில் எதிர்கட்சியின் பக்கத்தில் ஆசனங்கள் ஒதுக்கப்படவுள்ளன.

இதேவேளை, 20ஆம் திருத்தச் சட்டத்தை நீக்கி 19ஆம் திருத்தச் சட்டத்தை மீள கொண்டுவரும் வகையிலான திருத்தங்களை மேற்கொள்வது குறித்தும் நேற்றைய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஆராயப்பட்டதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.