அமைதியான போராட்டங்களை கலவரமாக்க அரசு முயற்சி: சஜித் குற்றச்சாட்டு

0
47

நாடு முழுவதும் மக்கள் அமைதியான போராட்டங்களிலும், ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டு வரும் நிலையில், இதற்கிடையே அரச சார்பு கூட்டாளிகள், தரகர்கள் மற்றும் அரச பயங்கரவாதிகளை உட்புகுத்திக் கலவரத்தை உருவாக்க அரசு முயற்சித்து வருகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றஞ்சாட்டினார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,

“அரச பயங்கரவாதம் மக்கள் போராட்டத்தில் கைவைத்து துன்புறுத்தினால் அவர்களைப் பாதுகாக்க ஒட்டுமொத்த எதிர்க்கட்சியினரும் ஒன்றிணைந்து அந்த இடங்களுக்குச் செல்வார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.