லண்டனில் துப்பாக்கி முனையில் குத்துச்சண்டை வீரர் அமீர்கானிடம் கொள்ளை சம்பவம்!

0
44

பிரித்தானியா தலைநகர் லண்டனில் பிரிட்டிஷ் குத்துச்சண்டை வீரர் அமீர்கானிடம் துப்பாக்கி முனையில் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் குறித்து 35 வயதான அமீர்கான் ட்விட்டரில் விவரித்ததாவது, கிழக்கு லண்டன், Leyton-ல் துப்பாக்கி முனையில் என்னிடமிருந்து எனது கைக்கடிகாரம் கொள்ளையடிக்கப்பட்டது.

எனது மனைவி Faryal உடன் நான் சாலையை கடந்தேன், அதிர்ஷ்டவசமாக Faryal சில அடிகள் எனக்கு பின்னால் வந்தார்.

திடீரென 2 ஆண்கள் அருகே ஓடி வந்தனர், அதில் ஒருவன் என் முகத்திற்கு நேராக துப்பாக்கியை நீட்டி கைக்கடிகாரத்தை தருமாறு கேட்டான். முக்கியமான விஷயம் என்னவென்றால் நாங்கள் இருவரும் பாதுகாப்பாக இருக்கிறோம் என அமீர்கான் தெரிவித்துள்ளார்.

அமீர்கான், 2004 ஆம் ஆண்டு ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் லைட்வெயிட் போட்டியில் வெள்ளி வென்றவர் மற்றும் முன்னாள் unified லைட்-வெல்டர்வெயிட் சாம்பியனாவார்.

பிப்ரவரியில் Kell Brook-யிடம் தோல்வியை சந்தித்த அமீர்கான், ஓய்வு பெறுவது குறித்து சிந்திக்க வேண்டும் என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.