நாடு மோசமடையும் நிலையில் தமிழர்களின் முடிவு என்னவாகும்?

0
367

இலங்கையில் அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் போராட்டம் தீவிரமடைந்துவரும் நிலையில் மூவின மக்களையும் போராட்டத்தில் இணையுமாறு அழப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மகாவம்ச மனநிலையிலிருந்து சிங்களவர்கள் வெளியே வரமாட்டார்கள் என மூத்த ஊடகவிலயாளர் ஏ.நிக்சன் கூறியுள்ளார் . இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

இதற்கு பல உதாரணங்கள் உள்ளன. 2009, 6 முதல் 11 வரையிலான தமிழ் வரலாற்றுப் பாடப்புத்தகங்களில் பௌத்த வரலாறுகளும் சிங்கள வார்த்தைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அதாவது சிங்கள இனவாதம் அரசாங்கத்திற்குள் ஒரு முக்கிய அங்கமாக கட்டமைக்கப்பட்டுள்ளது. எனவே கேஸ், டீசல், பெற்றோல் கிடைக்கும் போது வீதியில் இறங்கி போராடும் சிங்களவர்கள் அனைவரும் போராட்டம் முடிவடைந்ததும் வீட்டிற்கு செல்வார்கள். ஆனால் தமிழர் பிரச்சனை தொடரும்.

எனவே, தயவு செய்து சிங்கள மக்களின் பட்டினிப் போராட்டத்தில் தமிழர்களை இணையுமாறு கோராதீர்கள். இது 69 இலட்சம் சிங்கள மக்களின் பிரச்சினை. தமிழர்கள் கோத்தபாய ராஜபக்சவுக்கு வாக்களிக்கவில்லை.

ஒற்றையாட்சியின் கட்டமைப்பை மாற்ற சிங்களவர்கள் எவரும் விரும்ப மாட்டார்கள். எனது அரசியல் கட்டுரைகள் விரிவாகவும் ஆதரவாகவும் எழுதப்பட்டுள்ளன. எனவே அதற்கு என்ன தீர்வு என என்னிடம் கேட்காதீர்கள் என இலங்கையின் மூத்த ஊடகவியலாளர் ஏ.நிக்சன் தெரிவித்துள்ளார்.