நாட்டின் இன்று பல பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை! வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்

0
32

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் அல்லது இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி வடக்கு, சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் இவ்வாறு இடியுடன் கூடிய மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், மேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் முற்பகல் வேளையில் மழை பெய்யும் சாத்தியம் நிலவுவதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.

எனவே இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.