சைகை மொழியால் நாட்டுக்காக போராட முடியும்: நிரூபித்துள்ள மாற்றுத்திறனாளிகள்

0
32

சைகை மொழியால் நாட்டுக்காகப் போராட முடியும் என போராட்ட களத்தில் இணைந்து கொண்டுள்ள மாற்றுத்திறனாளிகள் நிரூபித்துள்ளனர்.

கொழும்பு – காலிமுகத்திடலில் அரசாங்கத்தைப் பதவிவிலகுமாறு வலியுறுத்தி ஆரம்பமான போராட்டம் பத்தாவது நாளாக இன்றும் தொடர்கிறது.

மழை, வெயில் பாராது இளைஞர், யுவதிகள் தற்காலிக கூடாரங்களை அமைத்து அந்த பகுதிக்கு ‘கோட்டா கோ கம’ எனப் பெயரிட்டு இன்றுடன் பத்தாவது நாளாகப் போராடி வருகின்றனர்.

நாடு முழுவதிலுமுள்ள மக்கள் இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்றையதினம் இப்போராட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் பலரும் கலந்து கொண்டு அரசாங்கத்துக்கு தமது எதிர்ப்பை சைகை மொழியால் வெளிப்படுத்தியுள்ளனர்.