உலகப் போர் துவங்கியது என அறிவித்த ரஷ்யா! சிறப்பு இராணுவத்தை களமிறக்கிய பிரித்தானியா

0
568

ரஷ்ய ஊடகங்கள் உலகப் போர் துவங்கியது என அறிவித்துள்ள நிலையில், பிரித்தானியாவின் சிறப்புப் படைகள் உக்ரைனில் வீரர்களுக்குப் பயிற்சி அளித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிப்ரவரி இறுதியில் உக்ரைன் மீது ரஷ்ய படையெடுப்பு துவங்கிய பின்னர், கீவ் சுற்றுவட்டாரத்தில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுவரும் உக்ரைன் இராணுவத்தினருக்கு முதன்முறையாக பிரித்தானிய சிறப்புப் படைகள் பயிற்சி அளிக்க முன்வந்துள்ளது.

உக்ரைன் வீரர்களுக்கு ஆயுதப் பயிற்சியுடன், சிறப்பு பயிற்சிகளும் பிரித்தானியா அளிக்க உள்ளது. மேலும், பிரித்தானியாவின் சிறப்பு ஆயுதங்களை பயன்படுத்தி, ரஷ்ய இராணுவ டாங்கிகளை மொத்தமாக சிதைத்துள்ளது.

இதுவரை இராணுவ பயிற்சியாளர்களே உக்ரைனில் களமிறக்கப்பட்ட நிலையில், தற்போது அதிகாரிகள் தரப்பு உக்ரைனில் களமிறங்கியுள்ளது. ஆனால், குறித்த தகவலை பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் உறுதி செய்யவில்லை என்பதுடன் மறுப்பும் தெரிவிக்கவில்லை.

இதனிடையே, உக்ரைனுக்கு திடீர் பயணம் மேற்கொண்ட பிரதமர் போரிஸ் ஜோன்சன், உக்ரைனுக்கு ஆயுதங்களை அளிப்பதன் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.