ஆற்றில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு

0
205

கிராண்ட்பாஸ் பகுதிக்கு அருகில் களனி ஆற்றில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அவர் கிராண்ட்பாஸில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

27 வயதுடைய குறித்த இளைஞன் கடந்த வியாழக்கிழமை (13) முதல் காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் வெள்ளிக்கிழமை (14) காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.