ஒளித்திரை (ப்ரொஜக்டர்) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மக்கள் தொடரும் போராட்டம்!

0
413

நேற்று இரவு ஜனாதிபதி செயலகத்தின் முன்பக்க சுவர்களில் ஒளித்திரை (ப்ரொஜக்டர்) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இளைஞர்களால் உருவாக்கப்பட்ட பல்வேறு ஆக்கபூர்வமான யோசனைகள் காட்சிப்படுத்தப்பட்டன.

அதனை தடுக்கும் முகமாக அங்கு கடமையில் இருந்த சிலர் அந்த ஒளிகளை ஒளிரவிடாது தடுத்திருந்தனர்.

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச உள்ளடங்கலாக ஒட்டுமொத்த அரசாங்கத்தையும் பதவி விலகுமாறு வலியுறுத்தி கடந்த வாரம் சனிக்கிழமை கொழும்பு – காலிமுகத்திடலில் ஆரம்பமான போராட்டம் 10 ஆவது நாளாக இன்றும் தொடர்கின்றது.

மழை வெயில் பாராது இளைஞசர்கள் தற்காலிக கூடாரங்களை அமைத்து அந்த பகுதிக்கு “கோட்டாகோகம” என பெயர்சூட்டி இன்றுடன் 10 ஆவது நாளாக போராடி வருகின்றனர்.

இதேவேளை, நாளுக்கு நாள் போராட்டக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றதும் குறிப்பிடத்தக்கது.

காலிமுகத்திடல் போராட்டத்துக்கு நாடு முழுவதிலும் மக்கள் தமது ஆதரவினை தெரிவித்து வருகின்றனர்.

அதன்படி, காலிமுகத்திடல் போராட்டத்திற்கு ஆதரவாக காலியிலும் இன்று 3 ஆவது நாளாக மக்கள் எழுச்சிப்போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

இதேவேளை, கண்டியிலும் காலிமுகத்திடல் போராட்டத்திற்கு ஆதரவாக மக்கள் எழுச்சிப் போராட்டம் இடம்பெற்றது.

மேலும் நேற்று இரவு யாழ்ப்பாண இளைஞசர்களும் தமது ஆதரவினை தெரிவிக்கும் முகமாக தீப்பந்த போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.