பாகிஸ்தானின் புதிய பிரதமர் மோடிக்கு கடிதம்!

0
41

பாகிஸ்தானின் புதிய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் (Shabazz Sheriff) அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தக் கோரி பிரதமர் மோடிக்கு(Narendra Modi) கடிதம் எழுதியுள்ளார்.

இந்தியாவுடன் அமைதியான அணுகுமுறையை கடைபிடிக்க விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது இருதரப்பில் உள்ள காஷ்மீர் உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் சுமுகத்தீர்வு காணத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் புதிய பிரதமராக பதவியேற்ற ஷெபாசுக்கு (Shabazz Sheriff) பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில் பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது.

பிரதமராகப் பதவியேற்று நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்திய போது ஷெபாஸ் ஷெரீப்(Shebaz Sheriff) காஷ்மீர் பிரச்சினையைத் தீர்க்காமல் இந்தியாவுடன் அமைதிக்கான சூழல் சாத்தியமில்லை என்று கூறியிருந்தார்.