ஆஸ்திரேலியாவில் உணவு கழிவுகள் பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது

0
586

ஆஸ்திரேலியாவில் உணவுக் கழிவு, பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. ஆண்டுதோறும் அங்கு சுமார் 80 மில்லியன் டன் உணவுக் கழிவு சேர்கிறது. அந்தப் பிரச்சினையைச் சமாளிக்க அரசாங்கமும் நிறுவனங்களும் முயன்று வருகிறது.

மக்களிடமிருந்து மாற்றம் தொடங்கவேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். உணவுக் கழிவுகள் பொருளியலுக்கு மட்டுமல்ல, சுற்றுப்புறத்துக்கும் கேடு விளைவிக்கின்றன. ஓரிடத்தில் குவியும் உணவுக் கழிவுகள், அழுகிப் போய் வெப்பவாயுக்களை வெளியேற்றுகின்றன. உலக அளவில் வெளியேற்றப்படும் வெப்பவாயுக்களில் உணவுக்கு கழிவின் பங்கு, ஏறக்குறைய 8 விழுக்காடு. உண்ணத் தகுந்த பொருள்களை வீசி எறிவதால் உலகில் பட்டினிப் பிரச்சினையும் கடுமையாக உருவெடுக்கிறது.

ஆஸ்திரேலிய அரசாங்கம், உணவுக் கழிவுப் பிரச்சினையைச் சமாளிக்க ஆண்டுதோறும் சுமார் 37 பில்லியன் டாலர் செலவிடுகிறது. 2030ஆம் ஆண்டுக்குள், உணவுக் கழிவுகளைப் பாதியாகக் குறைக்க ஆஸ்திரேலியா திட்டமிடுகிறது.