மதுபோதையில் தந்தையை தாக்கி கொலை! மகன் கைது!

0
38

திருகோணமலை – பாலத்தடிச்சேனை பகுதியில் மகனின் தாக்குதலினால் தந்தையொருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றிரவு இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

மதுபோதையில் வந்த மகன் உறங்கிக்கொண்டிருந்த தந்தையைத் தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார்.

மூதூர்- பாலத்தடிசேனை பகுதியைச் சேர்ந்த முருகப்பிள்ளை கைலாசப்பிள்ளை (59 வயது) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஏற்கனவே குடும்பத் தகராறில் மகன் தந்தையைத் தாக்க முற்பட்ட நிலையிலும், நேற்றிரவு மதுபோதையில் வந்த மகன் உறங்கிக்கொண்டிருந்த தந்தையைத் தாக்கியதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தமை தொடர்பில் சந்தேகத்தின் பெயரில் மகனான கே.வினோதன் (29வயது) என்பவரைக் கைது செய்துள்ளதாகவும் உயிரிழந்தவரின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காகத் திருகோணமலை பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்ல மூதூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

குறித்த மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.