ரஷ்யாவுக்கு எதிராக பல்கேரியா அதிரடி தடை!

0
39

உக்ரைன் மீது போர் தொடுத்ததால் ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன.

அந்த வகையில் ரஷ்ய கொடி தாங்கிய கப்பல்கள் அனைத்தும் கருங்கடல் துறைமுகங்களுக்குள் நுழைய பல்கேரியா தடை விதித்துள்ளது.

இதை அந்த நாட்டின் கடல்சார் ஆணையம், தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் ஆபத்தில் உள்ள கப்பல்கள், மனிதாபிமான உதவியை நாடும் கப்பல்கள், எரிசக்தி பொருட்கள், உணவு, மருந்துகளை ஐரோப்பிய நாடுகளுக்கு கொண்டு செல்லும் கப்பல்களுக்கு விதிவிலக்கு வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.