மரீன் லு பென்னை விளாடிமிர் புட்டினுடன் ஒப்பிட்டு சர்ச்சையை ஏற்படுத்திய ஊடக பேச்சாளர்..!

0
359
Gabriel Attal, Porte-parole du Gouvernement à la sortie du conseil des ministres, le 13 octobre 2021, au palais de l'Elysée, à Paris. © Stéphane Lemouton / Bestimage

ஜனாதிபதி வேட்பாளர் மரீன் லு பென்னை – இரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் ஒப்பிட்டு அரச ஊடக பேச்சார் கேப்ரியல் அத்தால் (Gabriel Attal) வெளியிட்ட கருத்து ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மரீன் லு பென்

“விளாடிமிர் புட்டின் எங்கும் நிறைந்துள்ளார். அவர் Rassemblement national கட்சியிலும் உள்ளார்” என கேப்ரியல் அத்தால் குறிப்பிட்டுள்ளார். Rassemblement national என்பது மரீன் லு பென்னின் தீவிர வலதுசாரி கட்சியாகும்.

விளாடிமிர் புடின்

அவர் மேலும் தெரிவிக்கையில், “விளாடிமிர் புட்டின் என்பது ஒரு தன்மையாகும். அது உங்களது வங்கிக்கணக்கிலும்… துண்டு பிரசுரங்களிலும் உள்ளது. உண்மை என்னவென்றால் இரண்டு நிலைப்பாடுகள் உள்ளன. ஒன்று மக்ரோன் போன்று ஐரோப்பிய நலனுக்காக விளாடிமிர் புட்டினை எதிர்ப்பது. மற்றது ஐரோப்பிய ஒன்றியத்தையே விளாடிமிர் புட்டினுக்காக இயக்குவது!” என தெரிவித்துள்ளார்.

அரச ஊடக பேச்சாளரான Gabriel Attal வெளியிட்ட இந்த கருத்து பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.