கனடாவில் புலம்பெயர்ந்த தம்பதிக்கு லொட்டரியில் பெரிய பரிசு!

0
24

கனடாவில் புலம்பெயர்ந்த தம்பதிக்கு லொட்டரியில் பெரிய பரிசு விழுந்துள்ளது.

Surrey-வை சேர்ந்த தம்பதி ஜார்னில் மற்றும் மஜிந்தர். இவர்களுக்கு லொட்டோ 6/49ல் $1 மில்லியன் பரிசு விழுந்துள்ளது. இது குறித்து மஜிந்தர் கூறுகையில், இவ்வளவு பெரிய பரிசு எங்களுக்கு விழுந்ததை நம்பவே முடியவில்லை.

நான் தான் ஜார்னிலை கனடாவுக்கு 1990களில் அழைத்து வந்தேன். இந்த பரிசு பணத்தை வைத்து என்ன செய்வது என்பது குறித்து இன்னும் சிந்திக்கவில்லை.

ஆனால் இந்த பரிசு சந்தேகத்திற்கு இடமின்றி எங்களின் வாழ்க்கையை மாற்றும். மீண்டும் சொல்கிறேன், இந்த வெற்றியை எங்களால் நம்ப முடியவில்லை என இன்ப அதிர்ச்சியுடன் கூறியுள்ளார்.