ஒரு துண்டு மண்ணையும் விட்டுத்தர தயாராக இல்லை: ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவிப்பு

0
29

ரஷ்யாவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவர உக்ரைன் நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள இடங்களை விட்டுக்கொடுக்க ஒருபோதும் தயாராக இல்லை என ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

உக்ரைனின் இராணுவம் டான்பாஸ் பிராந்தியத்தில் ரஷ்ய துருப்புகளை எதிர்த்துப் போரிடத் தயாராக உள்ளது எனவும், இது முழுப் போரின் போக்கையும் பாதிக்கும் என்றும் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.

மேலும் டான்பாஸைக் கைப்பற்ற முடிந்தால், கீவ்வைக் கைப்பற்ற ரஷ்யா மீண்டும் முயற்சிக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை எனவும் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.

இதனாலையே, ரஷ்ய துருப்புகள் உக்ரைன் மண்ணில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என தாங்கள் கூறி வருவதாகவும், டான்பாஸ் பகுதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் போரானது, ரஷ்ய படையெடுப்பின் போக்கையை மாற்றக்கூடியது என ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ரஷ்ய துருப்புகளையும் ரஷ்ய ஜனாதிபதியையும் தாம் ஒருபோதும் நம்பப்போவதில்லை என குறிப்பிட்டுள்ள ஜெலென்ஸ்கி, உக்ரைன் இராணுவம் துணிச்சலாக எதிர்வினையாற்றுவதாலையே, கீவ் நகரில் இருந்து வெளியேறியுள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுவரையான மோதலில் உக்ரைன் துருப்புகளின் கை ஓங்கியிருப்பதாகவே ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். மட்டுமின்றி, அப்பாவி மக்கள் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளது உண்மை தான் என குறிப்பிட்டுள்ள அவர், அது ரஷ்ய துருப்புகளின் காட்டுமிராண்டித்தனத்தின் வெளிப்பாடு என்றார். 