இன்று 10.30க்கு புதிய அமைச்சரவை பதவியேற்பு!

0
29

மறுசீரமைக்கப்பட்ட அமைச்சரவையை இன்று நியமிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிகழ்வு அரச தலைவர் மாளிகையில் இன்று முற்பகல் 10.30 அளவில் ஆரம்பமாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது 18 அமைச்சர்கள் அரச தலைவர் முன்னிலையில் சத்தியப்பிரமாண செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டம் தீவிரமடைந்ததை தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை தவிர்த்து ஏனைய 26 அமைச்சர்கள் கடந்த 3 ஆம் திகதி இரவு கூட்டாக அமைச்சு பதவிகளில் இருந்து விலகினர்.

இருப்பினும், அத்தியாவசிய அரச சேவைகளை முன்னெடுத்து செல்வதற்காக அரச தலைவரினால் 4 அமைச்சர்கள் மாத்திரம் நியமிக்கப்பட்டிருந்தனர்.

புதிய அமைச்சரவையில் தமக்கு எவ்வித அமைச்சுப்பொருப்புக்களையும் வழங்க வேண்டாம் என பல சிரேஷ்ட உறுப்பினர்கள் அரச தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவ்வாறான சூழலில், இன்றைய தினம் நியமிக்கப்படவுள்ள புதிய அமைச்சரவையில், பல புதியவர்கள் அமைச்சு பொறுப்புக்களை ஏற்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.