அமெரிக்க அதிபர் காற்றுடன் கைகுலுக்கிய சம்பவம்! குழப்பத்தில் ஜோ பைடன்!

0
43

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் காற்றுடன் கைகுலுக்கிய வீடியோ வெளியாகியுள்ளது.

ஜோ பைடனு்க்கு தற்போது 79 வயது. முதுமையின் தள்ளாட்டம் சில நேரங்களில் அவரை காட்டிக் கொடுத்து விடும். இந்நிலையில், அவர் குழப்பத்தில் காற்றுடன் கைகுலுக்கிய சம்பவம் நேற்று முன்தினம் நடந்தது.

வடக்கு கரோலினா மாகாணத்துக்கு சென்ற பைடன், அங்குள்ள கல்லூரி ஒன்றின் விழாவில் கலந்து கொண்டு 40 நிமிடங்கள் நின்றபடியே உரையாற்றினார். தனது உரையை முடித்து திரும்பிய அவர், தனக்கு பின்னால் அதிகாரிகள் நிற்கிறார்கள் என்ற நினைப்பில் அவர்களுடன் கைகுலுக்க கையை நீட்டினார்.

ஆனால், அவரை சுற்றி ஒருவரும் இல்லை. சிறிது நேரம் குழப்பத்தில் கையை நீட்டியபடியே நின்று, சுற்றும் முற்றும் பார்த்தார். ஒன்றும் புரியாமல் அவர் குழப்பத்தில் நின்றார்.

எந்த பக்கம் போவது என்றும் தெரியாமல் திகைத்து நின்றார். சிறிது நேரத்தில் சுதாரித்துக் கொண்டு மேடையை விட்டு இறங்கி சென்றார்.