திருகோணமலை பகுதியில் மின்னல் தாக்கி இருவர் உயிரிழப்பு

0
35

திருகோணமலை – புல்மோட்டை பகுதியில் மின்னல் தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

புல்மோட்டை – கரையோரப் பகுதியில் இறால்களை வேட்டையாடச் சென்ற இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த அனர்த்தம் நேற்று இரவு இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

புல்மோட்டை – நான்காம் பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய ஒருவரும், ஹமாஸைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவருமே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். பிரேத பரிசோதனைக்கு பின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

புல்மோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.