சொந்த பாட்டியை உயிருடன் ப்ரீசருக்குள் பூட்டிய கொடூரன்: பதறவைக்கும் சம்பவம்

0
55

வடமேற்கு ஜார்ஜியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது பாட்டியை உயிருடன் ப்ரீசருக்குள் அடைத்து கொன்றுவிட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் ஃபிலாய்ட் கவுண்டி பொலிசார் தெரிவிக்கையில், 82 வயதான டோரிஸ் கம்மிங்கின் சடலத்தை வியாழக்கிழமை பிற்பகல் ஆர்முச்சி பகுதியில் உள்ள குடியிருப்பில் மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து 29 வயதான Robert Keith Tincher என்பவர் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது. மேலும் விசாரணைக் கைதியாக அவர் ரோமில் சிறைவைக்கப்பட்டுள்ளார் எனவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டுமின்றி, டிசம்பரில் கம்மிங் விழுந்து காயம் அடைந்ததாகவும், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்குப் பதிலாக, டிஞ்சர் அவரை வீட்டிற்குள் இழுத்துச் சென்றதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, அவரை பிளாஸ்டிக் பைகளில் கட்டி, ஒரு பெரிய ஃப்ரீசருக்குள் அடைத்து வைத்துள்ளார் Tincher. சம்பவத்தின் போது தமது பாட்டி உயிருடன் இருந்ததாகவும் Tincher பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், ஒருமாத காலம் ப்ரீசரில் பாட்டியின் சடலத்துடன் Tincher வசித்து வந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், கம்மிங்கின் மரணத்திற்கான காரணத்தையும் நேரத்தையும் கண்டறிய ஜார்ஜியா புலனாய்வுப் பிரிவு பிரேதப் பரிசோதனையை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.