மூழ்கிக்கொண்டிருக்கும் இலங்கை அரச கப்பல்: திக்கற்று திகைத்து நிற்கும் கப்பல் தலைவன்!

0
49

இலங்கை அரசின் கப்பல் பொருளாதார பனிப்பாறையில் மோதி மூழ்கிக் கொண்டிருக்கிறது.

கப்பலின் தலைவன் தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளால் திகைத்து நிற்கிறார், ஆனால் சக்கரத்தில் இருக்க விரும்புகிறார்.

அவர் கப்பலில் உள்ள தீயை அணைக்க வேண்டும் அத்துடன் தாமும் தமது மக்களும் மூழ்கும் முன் எரியும் பிரச்சினைகளை தீர்க்க அவர் துணிய வேண்டும்.

இந்த கருத்துக்களை இன்றைய ஆங்கில செய்தி;த்தாள் தமது ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

சில நிச்சயமற்ற நிலைகளுடன் இந்த வாரம் பாரம்பரிய சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு உதயமானது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது பதவியை கைவிடப் போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார்.

ஆனால் நிலையான அரசாங்கத்தை பேணுவதற்கான எந்தவொரு திட்டமும் நிச்சயமற்றதாகவே உள்ளது. தெருக்களில் ஆர்ப்பாட்டம் நடத்திய மக்கள், ஜனாதிபதி ‘வீட்டுக்குச் செல்லும்’ வரை தாங்களும் தங்கியிருப்பார்கள் என்பதில் உறுதியாக இருக்கின்றனர்.

பலர் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள்,

ஆனால் மற்றவர்கள் அதை சாத்தியமற்றது என்று நிராகரிக்கிறார்கள்.

அண்மைய நிகழ்வுகளால் ஜனாதிபதி செயலிழந்ததாகத் தெரிகிறது.

அவரை அலுவலகத்திற்கு வரவிடாமல் போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தினர்.

அவர் தனது தனிப்பட்ட வீட்டில் கூட தங்குவதில்லை.

அவர் எப்போதும் வேறு இடத்தில் இருந்து செயல்பட முடியும் என்றாலும் அது அவரது இயலாமை போல் தெரிகிறது.

அவர் மூன்று முனைகளில் எதிர்த்துப் போரிடவேண்டியுள்ளது. அரசியல் மற்றும் பொருளாதாரம், ஆளும் கூட்டணி அணிகளுக்குள் வெடிப்பு என்பனவே அந்த மூன்று முனைகள்.

அவரை பதவி விலகக்கோரும் மக்களின் எழுச்சியின் மத்தியில் வரலாற்றில் முதன்முறையாக அரசாங்கம் திவாலாகிவிட்டது.

புதிதாக நியமிக்கப்பட்டு மீண்டும் நியமிக்கப்பட்ட நிதியமைச்சர் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்திடம் பேசுவதற்காகப் புறப்பட்டார்.

இதன் மூலம் சட்டத்தரணியான அவர் தனது வாடிக்கையாளரான கோட்டாபய ராஜபக்சவைப் பாதுகாக்கிறார்

சர்வதேச நாணய நிதியமே இலங்கைக்கான கடைசி வாய்ப்பு சலூன் என்பதே அனைத்துக் கட்சிகளின் ஒருமித்த கருத்து உள்ளது.

ஆனால் அதன் பரிந்துரைகள் என அழைக்கப்படும் ‘முடி வெட்டுதல்’, அரசாங்கம் சில மாதங்களில் தொழிற்சங்கங்களுடன் மோதுவதற்கு தன்னைத்தானே தயார்படுத்த வேண்டியிருக்கும்.

ஏற்கனவே செல்வாக்கற்ற அரசாங்கத்துக்கு இது பாரிய பிரச்சினையை ஏற்படு;த்தும்

எனவே இலங்கை அரச கப்பல் பொருளாதார பனிப்பாறையில் மோதி மூழ்கிக் கொண்டிருக்கிறது.

கப்பலின் தலைவன்; தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளால் திகைத்து நிற்கிறார் ஆனால் சக்கரத்தில் இருக்க விரும்புகிறார்.

அவர் கப்பலில் உள்ள தீயை அணைக்க வேண்டும் அத்துடன் அவருடன் அவரது மக்களும் மூழ்கும் முன் எரியும் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்று ஆங்கில இதழ் குறிப்பிட்டுள்ளது.