உக்ரைனுக்கு மேற்கத்தைய நாடுகளின் ஆயுதங்களை ஏற்றிச் சென்ற விமானத்தை ரஸ்யா சுட்டு வீழ்த்தியது

0
503

உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகளால் அனுப்பப்பட்ட ஆயுதங்களை ஏற்றிச் சென்ற உக்ரைன் இராணுவ விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளதாக ரஸ்யா அறிவித்துள்ளது

தமது வான் பாதுகாப்பு பிரிவுகள் இந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ரஸ்யா கூறுகிறது.

தென்மேற்கு உக்ரைனில் உள்ள ஒடெசா நகருக்கு வெளியே இந்த தாக்குதல் நடந்ததாக ரஸ்ய பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் இகோர் கொனாஷென்கோவ் மேற்கோள் காட்டி ரஸ்ய அரச செய்தி நிறுவனமான டாஸ் தெரிவித்துள்ளது.

எனினும் இந்த தகவல் இன்று சுயாதீனமாக சரிபார்க்கப்படவில்லை.

அத்துடன் உயிரிழப்புகள் குறித்தும் தகவல்கள் வெளியாகவில்லை.

இதேவேளை கடந்த 24 மணி நேரத்தில், ரஸ்ய வான் பாதுகாப்புப் பிரிவுகள் உக்ரைனிய இராணுவத் துருப்புக்கள் அல்லது படையினருக்கான களஞ்சியங்கள் மீது தாக்குதல்களை நடத்தியதாகவும் ரஸ்ய பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்