பொலிஸ் அகற்றிய கூடாரங்களை மீண்டும் நிர்மாணித்த போராட்டகாரர்கள்:குவியும் மக்கள்

0
40

பொலிஸார் உடைத்து அகற்றிய கோட்டா கோ கிராமத்தின் காலி கிளையை போராட்டகாரர்கள் மீண்டும் நிர்மாணித்துள்ளனர்.

கொழும்பு காலிமுகத் திடலில் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி நடத்தப்பட்டு வரும் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி காலியில் மக்கள் போராட்டத்தை நடத்தி வந்ததுடன் அந்த இடத்திற்கு கோட்டா கோ கிராம கிளை என பெயரிட்டிருந்தனர்.

காலி பொலிஸார் அந்த இடத்தில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களை இன்று காலை உடைத்து அப்புறப்படுத்தினர்.

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் அந்த இடத்தில் மிக நேர்த்தியான முறையில் மீண்டும் கூடாரங்களை அமைத்துள்ளனர்.

அந்த இடத்திற்கு கடந்த சில தினங்களை விட தற்போது பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கூடி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.