தடை செய்யப்பட்ட ரஷ்ய சரக்கு லொறிகள்! உக்ரைன் போர் எதிரொலி!

0
558

ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகளின் சரக்கு லொறிகள் போக்குவரத்து அனுமதிக்காக போலந்து எல்லையில் வரிசைக்கட்டி நிற்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் போர் விவகாரம் காரணமாகவே தடை செய்யப்பட்ட ரஷ்ய மற்றும் பெலாரஸ் நாடுகளின் சரக்கு லொறிகள் இந்த நிலையை சந்தித்துள்ளன.

ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகளுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், இரு நாடுகளின் சரக்கு வாகனங்களுக்கு தடை விதித்துள்ளன.

இதனால் போலந்து எல்லையான Kukuryk-Kozlovichi பகுதியில் நீண்ட தூரத்திற்கு லொறிகள் அணிவகுத்து நிற்கின்றன. எளிதில் கெடக்கூடிய உணவுப் பொருட்கள், மருந்து விநியோகம் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் அனுமதி மறுப்பு காரணமாக தடைபட்டுள்ளதாக வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இன்னும் பல கிலோமீட்டர்கள் கடக்க வேண்டியுள்ளது, என்ன செய்வதென்றே தெரியவில்லை என கூறியுள்ளார்.