கோட்டாபய அரசுக்கு எதிராக மற்றொரு பிரபல நாட்டில் பாரிய போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்!

0
30

இலங்கையில் கோட்டாபய அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அதற்கு ஆதரவு தெரிவித்து உலகம் முழுவதும் வாழும் இலங்கையர்கள், தாம் வாழும் நாடுகளில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அவுஸ்திரேலியாவில் வாழும் இலங்கையர்கள் சிட்டினி நகரில் மிகப் பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர். அதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துக்கொண்டுள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaska)  மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி, கொழும்பு காலிமுகத்திடலில் தொடர்ந்தும் 9வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது.

தமது கோரிக்கைக்கு தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

பெரும்பாலும் இளைஞர், யுவதிகள் மேற்கொண்டு வரும் இந்த போராட்டத்திற்கு பல தரப்பில் இருந்து ஆதரவு வழங்கப்பட்டு வருகிறது.