அமைச்சு பதவியை நிராகரித்த ஜீவன் தொண்டமான்!

0
204

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் (Jeevan Thondaman) தனக்கு வழங்க முன்வந்த அமைச்சு பதவியை நிராகரித்துள்ளதாக தெரியவருகிறது.

இதனை ஜீவன் தொண்டமான், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷக்கு (Gotabaya Rajapaksa) அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஜீவன் உட்பட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமான செயற்பட்டு வந்தாலும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவியை பெற்றுக்கொண்டு மீண்டும் அரசாங்கத்தில் இணைந்து கொள்ள தயாராகி வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன.

நுவரெலியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் தமது கட்சிக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவி வழங்கப்பட வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கோரி இருந்தது.