பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பெற்ற பரிசுப்பொருட்கள்..

0
618

பாகிஸ்தான் அரசியல் பிரதமராக இருந்தபோது இம்ரான் கான் பெற்ற பரிசுகள் குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

பாகிஸ்தான் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட இம்ரான் கான், தனது 3.5 ஆண்டுக் காலத்தில் உலகத் தலைவர்களிடமிருந்து ₹ 140 மில்லியனுக்கும் அதிகமான 58 பரிசுகளைப் பெற்றுள்ளார். அவை அனைத்தையும் மிகக் குறைந்த தொகையைச் செலுத்தியோ அல்லது எதுவும் செலுத்தாமலோ அவர் வைத்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பரிசுப் பொருட்களின் விபரம்:

  • ரோலக்ஸ் கைக்கடிகாரம்
  • கிராஃப் கைக்கடிகாரம்
  • ஒரு ஜோடி கஃப்லிங்க்ஸ்
  • ஒரு ஐபோன்
  • ஒரு மோதிரம்
  • ஒரு நெக்லஸ்
  • ஒரு பிரேஸ்லெட்
  • ஒரு ஜோடி காதணிகள்
  • ஒரு பேனா

₹ 3.8 மில்லியன் மதிப்புள்ள ரோலக்ஸ் கடிகாரத்தை, சுமார் ₹ 754,000 செலுத்திப் பெற்றுக் கொண்டார். ஒரு ரோலக்ஸ் வாட்ச், ஒரு ஜோடி கஃப்லிங்க்ஸ், ஒரு மோதிரம் மற்றும் ஒரு நெக்லஸ், பிரேஸ்லெட் மற்றும் ஒரு ஜோடி காதணிகள் என ₹ 23.5 மில்லியன் மதிப்பிலான பொருட்களை ₹ 11.5 மில்லியன் மட்டுமே செலுத்தித் தன்வசப்படுத்தி உள்ளார்.

அதேபோல ₹ 1.5 மில்லியன் மதிப்புடைய மற்றொரு ரோலக்ஸ் கடிகாரத்தை, ₹ 294,000 செலுத்திப் பெற்றுக் கொண்டார். மேலும், ஒரு ஜோடி ரோலக்ஸ் வாட்ச்கள், ஒரு ஐபோன் மற்றும் ₹ 1.73 மில்லியன் மதிப்புள்ள மற்ற பொருட்களை அவர் ₹ 338,600க்கு தக்க வைத்துள்ளார்.

கடந்த 2018இல் அவர் பிரதமராகப் பதவி ஏற்ற சமயத்தில் ₹ 85 மில்லியன் மதிப்புள்ள கிராஃப் வாட்ச், ₹ 5.67 மில்லியன் கஃப்லிங்க், ₹ 1.5 மில்லியன் பேனா, ₹ 8.75 மில்லியன் மோதிரத்தை அவர் பரிசாகப் பெற்று இருந்தார் . மொத்தம் ₹ 100 மில்லியன் மதிப்புள்ள பரிசுகளை அவர் வெறும் 20% தொகையைச் செலுத்தி தக்க வைத்துக் கொண்டார்.

மொத்தம் ₹ 140 மில்லியன் மதிப்புள்ள பரிசுகளை அவர் ₹ 38 மில்லியன் டாலர் செலுத்திப் பெற்றுக் கொண்டார். அதேபோல, ₹ 8,00,200 மதிப்புள்ள பரிசுகளை எந்தப் பணமும் செலுத்தாமல் வைத்துக் கொண்டுள்ளார். அவற்றில் மிகவும் விலையுயர்ந்த பரிசுகள் துபாயில் விற்கப்பட்டதாகப் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் குற்றஞ்சாட்டி உள்ளார்.

இம்ரான் கான் ஆட்சியில் அரசின் கடன் சுமையைக் குறைக்கப் பல சிக்கன நடவடிக்கைகளையும் எடுக்கப்பட்டன. ஆனால், அவரே இப்போது ₹ 140 மில்லியன் மதிப்பிலான பரிசுகளை வைத்துக் கொண்டது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.