புதிய வகை ஆயுதத்தை சோதனை செய்த வடகொரியா!

0
292

வட கொரியா அதன் அணு ஆயுதச் சண்டைத் திறனை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட புதிய வகை தந்திரோபாய வழிகாட்டி ஆயுதத்தை சோதனை செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது இந்த ஆண்டு வடகொரியாவால் ஏவப்பட்ட 13-வது ஆயுத சோதனையாகும்.

Mach 4-க்கு கீழ் அதிகபட்ச வேகத்தில் சுமார் 68 மைல்கள் (110 கிமீ) பறந்ததாகக் கூறப்படும் தேவ்கனையை சோதனை செய்தபோது கிம் ஜாங் உன் கண்காணித்த புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

சோதனை நிகழ்வின்போது, நாட்டின் பாதுகாப்புத் திறன்கள் மற்றும் அணு ஆயுதப் போர்ப் படைகளை மேலும் கட்டியெழுப்புவதற்கு நாட்டின் தலைவர் கிம் ஜாங் உன் முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் இராணுவ ஆயுதங்களைவெளியுலகத்துக்கு காட்ட வேண்டாம் என்று நாடு முடிவு செய்துள்ள நிலையில், ஆச்சரியமுட்டும் வகையில் வெள்ளிக்கிழமை கிம் ஜாங் உன்னின் தாத்தாவின் பிறந்தநாளுக்கான அணிவகுப்பின் போது இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், சமீபத்திய சோதனை ஏவுதல் வெற்றிகரமாக இருந்ததாக வடகொரியா கூறியுள்ளது, ஆனால் அது எப்போது நடந்தது அல்லது எந்த வகை ஏவுகணை சம்பந்தப்பட்டது என்பதை தெரிவிக்கவில்லை.

ஆனால் தென் கொரியாவின் கூட்டுப் படைத் தலைவர்கள் சனிக்கிழமை மாலை வடக்கின் கிழக்கு கடற்கரை நகரமான ஹாம்ஹங்கிலிருந்து இரண்டு ஏவுகணை ஏவுதல்களைக் கண்டறிந்ததாகக் கூறினார்.