வாகன விபத்துகளில் நான்கு பேர் உயிரிழப்பு

0
32

காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் மூன்று வீதி விபத்துக்களில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. தொடுவாவ, எஹலியகொட மற்றும் பேராதனை ஆகிய பகுதிகளில் விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.

இதேவேளை, தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் குளித்துக் கொண்டிருந்த நபரொருவர் விபத்துக்குள்ளானதாக கொபேகனே பொலிஸார் தெரிவித்தனர்.

கடற்படையினர், பொலிசார் மற்றும் பொதுமக்கள் கொபேகனே பகுதியில் நீராடிக்கொண்டிருந்த 21 வயதுடைய இளைஞனை தேடி வருகின்றனர். வாழைச்சேனை கனத்தானை குளத்தில் குளித்துக் கொண்டிருந்த நபரை முதலை தாக்கி கொன்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.