போராட்டகாரர்களின் கூடாரங்களை அகற்றிய பொலிஸார்

0
30

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவியில் இருந்து விலகுமாறு வலியுறுத்தி காலியில் நடைபெற்ற எதிர்ப்பு போராட்டத்திற்கு பொலிஸார் தடையேற்படுத்தியுள்ளனர்.

பொலிஸ் குழு ஒன்று இன்று காலை போராட்டம் நடைபெறும் இடத்திற்கு சென்று அங்கு அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களை அகற்றியுள்ளனர்.

ஜனாதிபதியை பதவி விலகுமாறு கோரி கொழும்பு காலிமுகத் திடலில் நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து காலியில் இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. கோட்டா கோ கிராமம் காலி கிளை என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் அந்த இடத்திற்கு பெயரிட்டிருந்தனர்.

ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி கொழும்பு காலிமுகத் திடலில் நடைபெறும் மக்கள் போராட்டம் இன்று 9 வது நாளாகவும் தொடர்ந்தும் நடைபெற்று வருகிறது.