இம்ரான் கானின் நிலை கோட்டாவுக்கு ஏற்படக்கூடாது: புதிய அமைச்சரவை பதவியேற்பின் பின்னணி

0
25

காலிமுகத்திடல் போராட்டம் மற்றும் நாடளாவிய ரீதியில் அரசாங்கத்துக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்படும் நிலையில் இன்று அல்லது நாளை புதிய அமைச்சரவை பதவியேற்கும் என்ற செய்தியின் பின்னணி குறித்து தகவல் வெளியாகியுள்ளது

ஏற்கனவே பாகிஸ்தானில் இம்ரான் கானின் அரசாங்கத்துக்கு ஏற்பட்ட நிலை தற்போது இலங்கை அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்தே இந்த திடீர் ஏற்பாடு மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தானுக்கு நிதியுதவியை வழங்க தயாராக இருந்த சர்வதேச நாணய நிதியம், அங்கு இம்ரான் கானின் அரசாங்கம் நிலையற்றதாக இருந்தமையால், நிலையான அரசாங்கம் நிறுவப்படும் வரை உதவி தொடர்பான முனைப்புக்களை நிறுத்தியது.

இதே நிலைமையே இன்று இலங்கைக்கு ஏற்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடன் சந்திப்பை நடத்துவதற்காக நிதியமைச்சர் அலி சப்ரியின் தலைமையிலான குழு வோசிங்டன் சென்றுள்ளது.

இந்தநிலையில் இலங்கையின் நான்கு அமைச்சர்களை கொண்ட நிர்வாகம் மாத்திரமே செயற்பட்டு வருகிறது.

இந்த சந்தர்ப்பத்தில் பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட நிலை, இலங்கைக்கும் ஏற்படக்கூடாது என்பதற்காகவே புதிய அமைச்சரவை பதவியேற்கவிருக்கிறது

எனவே நிலையான அமைச்சரவை ஒன்றை ஏற்படுத்திவிட்டதாக சர்வதேச நாணய நிதியத்துக்கு காட்டுவதற்காகவே புதிய அமைச்சரவை இன்;று அல்லது நாளை அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமது பதவிக்காலம் முடியும வரை விலகப்போவதில்லை என்று ஜனாதிபதி கூறிருப்பதும் சர்வதேச நாணய நிதிய பேச்சுவார்த்தையை தக்க வைப்பதற்காக முயற்சியேயாகும்.

எனினும் சர்வதேச நாணய நிதியம், தற்போதைய நாட்டு அரசியல் நிலை குறித்து தமது பிந்திய கணிப்பை இதுவரை வெளியிடவில்லை.