வவுனியா ஊடகவியலாளர் மீதான தாக்குதலை கண்டிக்கிறோம்: வவுனியா ஊடக அமையம்

0
392

வவுனியா ஊடகவியலாளர் மீதான தாக்குதலை கண்டிப்பதோடு தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்துவதாக வவுனியா ஊடக அமையத்தினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“இன்று (15.04) வவுனியாவில் விபத்து சம்பவம் ஒன்று தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற எமது ஊடகவியலாளரான வரதராசா பிரதீபன் என்பவர் மீது இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தை வவுனியா ஊடக அமையம் கண்டிப்பதோடு தன்னை ஊடகவியலாளர் என வெளிப்படுத்திய பின்னரும் அவர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றோம்.

வவுனியாவில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஊடகவியலாளர்கள் மீதான அத்துமீறல்களும் அவமதிப்புக்களும் சிறிது சிறிதாக இடம்பெற்று வந்த நிலையில் தற்போது ஊடகவியலாளர் மீது கத்தி போன்ற கூரிய ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்தும் அளவிற்கு நிலமை மோசமடைந்துள்ளமை வவுனியாவில் ஊடகவியலாளர்களின் சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் கேள்விக்குட்படுத்தியுள்ளது.