வட்டக்கச்சி பிரபல ஆலய இயந்திர தகடு திருட்டு!

0
378

கிளிநொச்சி – வட்டக்கச்சி ஸ்ரீ ரங்கநாதர் ஆலயத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இனந்தெரியாத நபர்களினால் ஆலயத்தில் மூலஸ்தான விக்கிரகம் பெயர்க்கப்பட்டிருக்கின்றதாக கூறப்படுகின்றது.

ஆலயத்தில் பூசை வழிபாடுகள் நிறைவடைந்த பின்னர் ஆலயம் வழக்கம்போல் மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இனந்தெரியாத நபர்கள் ஆலயத்துககுள் புகுந்து மூல விக்கிரகத்தை பிரட்டி அதன் கீழிருந்த தகடுகளை திருடிச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்ட நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.