போருக்கு பயந்து உக்ரைனுக்கு செல்ல மறுத்த அமெரிக்க அதிபர்!

0
447

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவை உலக நாடுகள் கண்டித்து வருகின்றன.

அதேநேரம் இந்த போரை எதிர்கொண்டு வரும் உக்ரைனுக்கு ஆதரவு பெருகி வருகிறது.

அந்தவகையில் பல நாடுகளின் தலைவர்கள் உக்ரைனுக்கு நேரில் சென்று அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி(Vladimir Zelensky)யிடம் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகிறார்கள்.

இந்த வரிசையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும்(Joe Biden) உக்ரைன் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.

ஜனாதிபதி அல்லது துணை ஜனாதிபதி இருவரில் ஒருவரோ அல்லது ராணுவ மந்திரி அல்லது வெளியுறவு மந்திரியோ உக்ரைன் செல்வார்கள் என வெள்ளை மாளிகையை மேற்கொள் காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருந்தன.

ஆனால் இந்த தகவலை ஜோ பைடன்(Joe Biden) நிர்வாகம் மறுத்து உள்ளது. அதாவது ஜனாதிபதி ஜோ பைடன்(Joe Biden) உக்ரைன் செல்ல மாட்டார் என வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜென் சாகி (Jen Saki) உறுதிபட தெரிவித்தார்.

White House press secretary Psaki to step down next year
Jen Saki